அல்- ஃபாத்திஹா (தோற்றுவாய்) Al- Fathiha (The Opening) - السلام عليكم ورحمة الله

Recent

Friday, August 18, 2017

அல்- ஃபாத்திஹா (தோற்றுவாய்) Al- Fathiha (The Opening)


001. அல் ஃபாத்திஹா (தோற்றுவாய்) 
மக்கீ

வசனங்கள்: 7
(ஜுஸ்வு: 1)
1:1 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏ 
1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏ 
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி (யும் ஆவான்).

1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏ 
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏ 
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ 
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.


----- டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் -----

Sura Al- Fathiha Tamil MP3
Download Link

No comments:

Post a Comment